Monday, November 28, 2011

நனையாத ஈரங்கள் !!!

கருவின் உரு கைகளில் தவழுகையில் ,


காகித கப்பல் கரை சேர்கையில் ,


பட படக்கும் பட்டாம்பூச்சி உள்ளங்கையினுள் துடி துடிக்கையில் ,


எதிர்பாராத விடுமுறைகளில் ,


மொட்டை மாடி நிலவில் அன்னை மடி தொழுகையில் ,


பிடிக்காத விவாதமும் பிடித்தவர்களிடம் விவாதிக்கையில் ,


எதிர்பார்க்கும் தருணமும் எதிர்பாராமல் நிகழ்கையில் ,


மழையில் நனைந்து கண்ணீர் கலந்து நடக்கையிலும்


துடைத்து விடும் கைகளுடனும் ,


உவமையில்லா உவகையின் கிறுக்கல்கள் !!!!



Monday, November 21, 2011

கிராமத்து தேவதைகள்

செம்மண் புழுதியில் புரண்டாலும் ,
இன்னும் கலங்கப்படாத நெஞ்சங்கள்.
பட்ட காயத்திற்கு மண்ணே மருந்தாகும் ஊர் மகத்துவம் .
அந்நியம் பார்க்காத அப்பத்தாக்கள்,
ஒருக்களித்து படுத்தாலும் மாளிகையாய் தெரியும் தென்ன ஓலை குடிசைகள் ,
தன வீட்டு கலியாணமாய் கொண்டாடப்படும் ஊர் திருவிழா ,
அடுத்த வீட்டு josehph சித்தப்பாவும்
எதிர் வீட்டு அப்துல்லா பெரியப்பாவும்
தரும் தீபாவளி பண்டங்கள் ,
ஆறு மணிக்கு மேல் களைகட்டும் தெரு
விவாத மேடையை மாறும் திண்ணைகள் ,
விட்டதே பார்த்து வெறுந்தரையில் படுத்தாலும்
நிம்மதியாய் வரும் தூக்கம் ,
வெள்ளந்தியாய் தம்மக்கள் பெற்ற
கிராமத்து தாயே நீ நீடூழி வாழ வணங்குகிறேன் !!!

நெஞ்சில் இருந்து நகர மறுக்கும் நினைவுகள் !!!!

காக்கை குருவிகளும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கும் இதமான , சற்று மிதமான , மாலை வேளை.ஏதோ ஓர் சிந்தனையில் மீண்டும் உதிர்கபடும் நினைவலை கிறுக்கல்கள் . பல நாள் பிரிந்த காதலனை பார்க்கும் போது ஏற்படும் ஓர் இனம் புரியா உணர்வு ,உற்ற தோழனை பார்க்கையில் வரும் பரவசம் , தாய் மண்ணில் கிடைக்கும் ஓர் சுகம் இவை அனைத்தும் ஓர் உணர்வாக பள்ளி கால நினைவுகளில் மட்டுமே . சூரியன் கண்களை திறக்கும் முன்பே திறக்க படும் நம் பள்ளி கதவுகள் , அவன் மறைந்த பின்பும் ஓயாத நம் கூச்சல்கள் . சிறை வாசமாய் பலருக்கு தெரிந்தாலும் , நமக்கு மட்டுமே தெரியும் அதன் சுவாசம் . "Excuse me , சொல்லுங்கோ மா ",இன்று நாம் சொல்ல தயார், கேட்க? ."ஆர் யு ராமானுஜம்??",இன்று நமக்குள் எத்தனையோ ராமானுசங்கள் ,ஆனால் இன்னும் விடை மட்டும் கிடைக்க வில்லை. "Albha square.Rough நோட் எடுங்கோ ",எடுத்து விட்டோம் ஆனால் எங்கே செல்வது??."A= B + C, Program பாருங்க பா ",இன்னும் சிரிப்பு வந்தாலும் ஒட்டி கொள்கிறது எங்கிருந்தோ வரும் ஈரம் ."எதுக்கு பா எல்லா question உம் படிகிற நான் சொல்றது போதும்.உங்கள பாடா படுத்தறாங்க பா",தேர்வுகள் பாஸ் ஆகிவிட்டன, அக் காலங்களும் தான்.அடுத்த தெருவில் இருக்கும் வீட்டிற்கு அரை மணி நேரம் எடுத்த பொழுதுகள் ,mega revision இல் அடித்த அரட்டைகள் ,2nd floor உம் பஜன் ஹால் உம் பேசி கொண்ட நாட்கள் ,கேமரா வில் களை கட்டிய practicals , எத்தனையோ கார்த்திக் ஜெஸ்ஸி கள் ,மீண்டும் கிடைக்குமா அந்நாட்கள் ??இது ஏக்கமா அல்லது விருப்பமா ??? விடை அறிய விருப்பமில்லாமல் முடிக்கிறேன் என் கேள்வியை.

Wednesday, May 4, 2011

நண்பன்...

எங்கோ வளைந்து சென்ற பாதையில்
கண்டேன் உன் நட்பை...
இன்று , துணையாய் உணர்கிறேன்
என்றும் என் பாதையில்!!!!!