Wednesday, December 15, 2010

கிறுக்கல்கள்

கடற்கரை மணலில் கிறுக்கிவைத்த வரிகள் ...
எழுதிய கண்களுக்கு ஒரு நொடி கனவு ....
அடித்து சென்ற அலைகளுக்கு
ஆயுள் முழுதும் உயிரில் கலந்த ஸ்பரிசம்.....

Friday, December 10, 2010

பாதையின் வழி தேடி...

இரவின் கண்கள் நீள ,
கனவின் கதவுகள் திறக்க,
வெண்ணிலவிற்கு துணையாக விழிகளும் மாற,
மூச்சுக் காற்று முயற்சியை சுவாசிக்க,
தவறி விழுந்த பின்னும்
நடை பழகும் குழந்தையின் துணிவுடன்,
மண்ணில் மறைந்திருந்து
விருட்சமாகும் விதையின்
பொறுமை கற்று,
நாளை உதிப்பேன் என்ற நம்பிக்கையில்
இன்று மறையும் சூரியனின் கரம் பற்றி,
தோல்வியில் பக்குவத்தின்
ரகசியம் கண்டு
நடந்தால்
நீ செல்லும் வெற்று பாதையும் மாறும்
வெற்றி பாதையாக....!!!!

Thursday, April 1, 2010

என் எதிர்பார்ப்பு

சோர் என மழை அடித்து கொண்டிருக்கும் நேரம் மனதுக்குள் மத்தாப்பூ பூக்கிறது...காரணம் புரியாமல் இதை எழுத துவங்குகிறேன்.மழை துளிகள் என் கைகளில் தவழும் இந்த நிமிடம் எனக்கு புதியது;நன் இதுவரை எனக்குள் பார்த்திராதது.சிலு சிலுவென அடிக்கும் காற்று , என் கண்ணாடிகளை நனைக்கும் சாரல் உடம்பை சிலிர்க்க வைத்த இந்த மழை என்னை என் நினைவு உலகத்தில் தாலாட்டு கிறது (என் அனுமதி இன்றி ). நான் அமர்ந்து எழுதி கொண்டிருக்கும் இதே இடத்தில் சில நாட்களுக்கு முன் அதாவது ஒரு வருடம் முன் அவளுடன் இருந்து பேசி கொண்டிருந்தேன்.இன்று அது ஒரு இதமான கனவு...மறுபடியும் கிடைக்க முடியாத கனவு.மழை துளிகள் என்னை நனைக்க நனைக்க நினைவலைகள் இன்னும் இதமாக அடிக்கின்றது.சில நாட்கள் பின்னோக்கி வாழ தயார் ஆகுகிறேன். யார் வந்து கிளாஸ் நடத்தினாலும் யாருக்கோ நடத்தியது போல் நாங்கள் பேசி கொண்டிருந்தது,chemistry classil answer தெரியாமல் sahithya திரு திருவென முழித்தது,lunch breakil ஊர் கதைகள் அனைத்தையும் அலசி ஆராய்ந்தது ,evevning breakil ஒரே snacks boxil அனைவரும் கை விட்டது,தமிழில் ஆரம்பித்து அனைவரையும் பாகுபாடின்றி ஓட்டியது,எதுவுமே தெரியாமல் முன்று மணிநேரம் எக்ஸாம் ஹால்லில் எப்படா விடுவார்கள் என காத்து கொண்டு இருந்தது ,ரோடு rulesai மதித்து ரோட்டை மறித்து கொண்டு நடந்தது, என்று எதை பற்றியும் கவலை இன்றி சுற்றி திரிந்தோம்.ஆனால் இன்று , அருகில் இருந்தும் முகம் கூட பார்ப்பது இல்லை. அடி மனது குள் ஆசை அலை மோதினாலும் எங்கள் வேண்டாத பிடிவாதம் ,விட்டு குடுக்க துணியாத மனம் ,சுற்றியிருபவர்களின் வார்த்தைகளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை என்று எங்களை நாங்களே ஏமாற்றி கொண்டு இருக்கிறோம்.அந்த நாட்களை நாங்கள் மீண்டும் பெற போவது இல்லை.ஆனால் நாங்கள் முகம் பார்த்துகொள போகும் அந்த நாளை எதிர் பார்த்து கொண்டே என் எழுத்துகளுக்கு வைக்கிறேன் முற்று புள்ளி என் எதிர்பார்ப்புக்கு அல்ல.