Monday, December 29, 2008

புதிய ஆண்டின் இனிய துவக்கம்

கடந்து சென்ற ஆண்டின்

பசுமையான நினைவலைகள் ,

உள்ளத்தில் ஊஞ்சலாடி கொண்டிருக்க,

கடக்க இருக்கும் ஆண்டை பற்றிய

கனவுகள் கண்களில் கவி பாடிகொண்டிருக்க ,

புதிய ஆண்டு துவங்கி கொண்டிருக்கும்

இந்த இனிய நாளில்

நம் மகிழ்ச்சி பயணத்தை,

புதிய கோணத்தில் ,

இனிதே துவக்குவோம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Sunday, December 21, 2008

அன்பு தோழியே !!!!!

கவிதை எழுத நினைத்தவுடன்
நினைவுக்கு வருவது உன் பெயர் தான்,
மனதில் நிழலாடுவது உன் நினைவுகள் மட்டும் தான்.
ஒன்றா இரண்டா,
உன்னுடன் கழிந்த நாட்கள்!
என்னை சுற்றி பல பேர் இருந்தாலும்,
எனக்குள் மலர்ந்த நட்பு உனக்கு மட்டும் தான் சொந்தம்.
நட்புக்கு மௌனமும் ஒரு மொழி என்று,
உன்னிடம் புரிந்து கொண்டேன்.
நான் கொஞ்சியதும் உன்னை மட்டும் தான்,
கெஞ்சியதும் உன்னிடம் மட்டும் தான்.
செல்லமாக கோபித்து கொண்டு தள்ளி அமர்ந்தால்
என்னுடன் நெருங்கி அமர்ந்து,
"என்ன ஆச்சு ?" என்பாய்,
ஊடலிலும் இன்பம் கண்டது உன்னிடம் மட்டும் தான்.
உன்னிடம் சண்டை போடாமல் என் நேரம் கழிந்தது இல்லை.
உன்னிடம் 'சாரி' கேட்காமலும் என் நாட்கள் முடிந்தது இல்லை.
நாட்கள் நகரலாம் ,
ஆனால் உன்னுடனான இந்த நெருக்கம் என்றும் குறையாது!!!!!

Monday, November 24, 2008

எந்தன் உயிர் தோழியே !

என்னுள் வார்த்தைகளாக பதிந்த என் வாக்கியமே !

உன்னுடன் திரிந்த நாட்கள் என் வாழ்வின் அங்கங்கள் !நாம் இருவரும் ,

சிரித்து மாட்டிக்கொண்ட சில நிமிடங்கள் ,

தமிழ் கடலில் தத்தளித்த பல நாட்கள் ,

படிக்காமல் எழுதிய பல தமிழ் கிறுக்கல்கள் ,

நடந்து செல்கையில் சில நெருடல்கள் ,

எழிலோவியமான அந்நாட்கள் !
எனக்குள் பாதசுவடுகள் பல தெரியலாம் ,
பல கரையலாம்,
ஆனால் ,
உன் பாதசுவடு மட்டும் ,

என் நெஞ்சில் நீங்காமல் பதிந்து விட்டது .

என்றும் அழியாது !

Monday, October 20, 2008

அம்மா !!!!!!

கருவாக ஈரைந்து மாதங்கள் நான் கொடுத்த சுமையையும்
பிறக்கும் போது நான் கொடுத்த வலியையும்
தாய்மை என்னும் பெயரில் தாங்கிகொண்டாய்.
தவழ பழகும் போது என் தரையானாய்,
நடக்க பழகும் போது என் கால்களானாய்,
அழும் போது என் அழுகையானாய்,
சிரிக்க பழகும் போது என் சிரிப்பானாய்,
மொத்தத்தில் நீ நானாக ஆனாய்!!
என் முதல் எழுத்தை கற்று தந்தவளும் நீயே,
பள்ளியில் என்னை விட்டு சென்றவளும் நீயே!!!
என் மழலை பேச்சினை இரசித்தாய்,
எனக்கு படிப்பினை கொடுத்தாய்.
நான் வளர வளர என்னுடன் வளர்ந்தாய்,

உன் தோழை தாண்டி வளர்ந்ததனால் என் தோழியானாய் .
நான் படிக்க நீ கண் விழித்தாய்.
என் கிண்டல்களை இரசித்தாய்
என் தோல்விகளில் எனக்கு தோள் கொடுத்தாய்
என் இன்பங்களில் எனக்கு கை கொடுத்தாய்,
கண்டிக்கும் போது பாசத்தையும்,
பகிர்ந்து கொள்ளும்போது தோழமையும் கொடுத்தாய்.
அனைத்தையும் தாண்டி
என் மொக்கைகளுக்கு பொறுமையாக செவி கொடுத்தாய்.
என் ஏழேழு ஜென்மங்களிலும்
நீயே ! நீ மட்டுமே!

என் தாயாக வேண்டும்!!!!!!!

Friday, October 3, 2008

விடியாத விடியல்

சலசலகாத நதியாய்

விசாத தென்றலாய்

மொட்டு விடாத மொட்டுகளாய்

முத்தமிடாத வண்டுகளாய்

விடியாத விடியலாய் உலகம்.



Sunday, September 21, 2008

மனதின் துடிப்பு !!

உன்னிடம் ஒன்று சொல்ல
காற்றை அனுப்பினேன்
உன்னை தீண்டிவிடுமோ என்று போக மறுத்தது
மழையை அனுப்பினேன்
உன்னை நனைத்து விடுமோ என்று நகர மறுத்தது
நிலவை அனுப்பினேன்
உன் கனவை கலைத்துவிடுமோ என்று கூற மறுத்தது
இவை அனைத்தும் ஒதுங்கிவிட
என் மனம் மட்டும் தைரியமாக உன்னிடம் சொல்கின்றது
"என்னை மன்னித்துவிடு" .

Wednesday, September 17, 2008

கனா காலம்!!!!!!

தென்றலோடு தென்றலாய் தவழ்ந்த நாட்கள்
மழையோடு கொஞ்சி விளையாடிய பருவங்கள்
கோபத்தின் தோழனாக சில நாட்கள்
நித்ராதேவியின் பிராணநாதனாக சில மணி நேரங்கள்
கூண்டோடு மாட்டிக்கொண்ட சில நிமிடங்கள்
ஒன்றுமே தெரியாமல் விழித்த ஒரு மணி நேரம்
இல்லை பல மணி நேரம்
கணக்கை கணக்கு பண்ண முடியாமல் எழுதிய கிறுக்கல்கள்
இயல்புகளின் இயல்புகளை இயல்பாக கவனித்த சில நொடிகள்
தமிழில் எழுந்த மிக பெரிய சந்தேகங்கள்
மணிமகுடமாக,
என்றும் அலுக்காத எங்கள் அரட்டைகள்
இவைஅனைத்தும் கலந்ததே எங்கள்
எட்டு மணி நேர சொர்கலோகம்
அதுவே பள்ளிக்காலம்
அது ஒரு கனா காலம்!!!!!!

Friday, September 5, 2008

என் அன்பே !!!

படபடக்கும் பார்வைகள்
துடிதுடிக்கும் உதடுகள்
சில்லரிக்கும் சொற்கள்
குழைந்தைதனமான குறும்புகள்
கட்டிபோடும் கட்டுப்பாடுகள்
செல்லமான தண்டனைகள்
சின்ன சின்ன ஊடல்கள்
இவை அனைத்தும் கலந்த காவியம் நீ !!!!!!!