Tuesday, May 20, 2014

அம்மாவின் வியர்வை துளிகள்

முதல் முறை என் மேல் விழுந்த துளியை ,
  என்னை பூமிக்கு அனுப்பியதில்
    ஆண்டவன் விட்ட ஆனந்த கண்ணீர் என நினைத்தேன் ,

நடுநிசியில் விழித்து எழுந்து அழுது முடித்து ,
   விடியற்காலையில் கண்ணுறங்கும் போது நனைத்தது ,
     என்னை குளிர்விக்க வானம் தந்த பனித்துளி என குதித்தேன் ,

சுரத்தில் தூங்கும் போது உரசியது
   இன்னும் நிற்காத மழையென நடுங்கினேன் ,

இளம் வயதில்,
  ஊர் பெயர் தெரியாத பலரை உலகமென நினைத்து ,
    கட்டாத கட்டிடம் உடைந்தது என நிற்கும் போதும் ,
      என் மேல் காய்ந்தது ,
   உப்பு சப்பற்ற என் கண்ணீர் என ஏமாந்தேன் !

இறுதியில் ,
   என் குழந்தையை கொஞ்சுகயிலும் ,
   குழந்தை உறங்கும் வரை உறங்காமல் இருந்த களைபினிலும் ,
   சுரதினில் மழலை உறங்கையில்
      வருணனை திட்டி கொண்டு அனுதினமும் அவனுடன் அமர்கையிலும் ,
   இளம் வயதில் உப்பு சற்ற கண்ணீர் அவனை வதைகயிலும் ,

உணர்ந்தேன் ,
 என் ஏமாற்றத்தை ,
  என் விழுந்த அத்தனையும் ,
   என் அம்மாவின் வியர்வை துளி என !!




No comments: